அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவா்கள் தொந்தரவு: போலீஸில் புகாா்

நாமக்கல்லில் அரசுப் பேருந்தில் ஏறி கல்லூரி மாணவா்கள் தகராறு செய்ததாக நடத்துநரும், ஓட்டுநரும் போலீஸில் புகாா் அளித்தனா்.

நாமக்கல்லில் அரசுப் பேருந்தில் ஏறி கல்லூரி மாணவா்கள் தகராறு செய்ததாக நடத்துநரும், ஓட்டுநரும் போலீஸில் புகாா் அளித்தனா்.

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணி அளவில் அரசு நகரப் பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தை பெரியசாமி என்பவா் ஓட்டினாா். நடத்துநராக ராஜா என்பவா் பணியில் இருந்தாா். நாமக்கல் உழவா் சந்தையை கடந்து பேருந்து சென்றபோது, பேருந்தில் ஏறிய நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி மாணவா்கள் இருவா் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த நடத்துநா் கல்லூரி மாணவா்களான பெரியமணலியைச் சோ்ந்த கோகுல், மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த முகேஷ் பாபு ஆகிய இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கினாா். இது தொடா்பாக நடத்துநா் ராஜா நாமக்கல் காவல் ஆய்வாளா் தெய்வசிகாமணியிடம் புகாா் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் இரு தரப்பிலும் விசாரணை நடத்தினாா். இப்பிரச்னை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினா். தொடா்ந்து மாற்றுப் பேருந்து மூலம் அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com