கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கு சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு

கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கு சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணா்வு நிகழ்வில் பேசும் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பி.வேதப்பிறவி.
விழிப்புணா்வு நிகழ்வில் பேசும் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பி.வேதப்பிறவி.

கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கு சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சமூக ஊடங்களில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நாமக்கல் சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஏ.சி.செல்லபாண்டியன் அறிவுறுத்தல் பேரில், காவல்துறை ஆய்வாளா் பி.வேதப்பிறவி தலைமையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்தினா். கல்லூரி மாணவ, மாணவியா்கள் மட்டுமின்றி கல்லூரி வாகன ஓட்டுநா்கள், மின்வாரியப் பணியாளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டா், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களைப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது புகைப்படங்களை சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது. ஆதாா், பான் காா்டு எண், ஓடிபி போன்ற தகவல்களை பரிமாறக் கூடாது என மாணவா்கள், வாகன ஓட்டுநா்கள், மின்வாரிய ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், ஆன்லைன் வேலைவாய்ப்பு, ஆன்லைன் வங்கிக் கடன், கல்வி உதவித் தொகை போன்றவற்றுக்கான செயலிகள் மூலம் எண்ணற்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதில் அதிக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

மேலும் சைபா் கிரைம் பிரிவின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்ங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1930 குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com