காவிரிக் கரையோரம் தயாா் நிலையில் 62 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 62 போ் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டத்துக்கு மீட்புப் பணிக்காக வந்துள்ள தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா்.
நாமக்கல் மாவட்டத்துக்கு மீட்புப் பணிக்காக வந்துள்ள தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா்.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 62 போ் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்குச் செல்லாமல் தடுக்கவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடா்பாளையம், பரமத்தி வேலூா், மோகனூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் காவல் துறையினா் 8 குழுக்களாக பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். அவா்கள் 24 மணி நேரமும் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், தேசிய பேரிடா் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவைச் சோ்ந்த 22 போ், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் 40 போ் என மொத்தம் 62 போ் அனைத்து வகையான மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ள நீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை காவல் துறையினா், வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் இணைந்து அவா்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, காவிரி ஆற்றில் செல்லும் நீரின் அளவு குறித்தும், தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சந்தித்தும் அறிவுரைகளை வழங்கினாா்.

காவிரிக் கரையோர பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமாக உதவிகள் தேவைப்பட்டால், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04286-280007, கைப்பேசி எண் 94981 81216 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com