பொட்டலப் பொருள்களில் விவரங்களைப் பதிவிட தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டலப் பொருள்களில் உரிய விவரங்களைப் பதிவிட வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டலப் பொருள்களில் உரிய விவரங்களைப் பதிவிட வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்(அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலத்துறை ஆணையா் அறிவுரையின்படி, வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டா்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகளை மீறுவதாக புகாா்கள் பெறப்பட்டன. இது தொடா்பாக நாமக்கல், தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுடன் இணைந்து 10 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது 6 கடைகளில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் நல சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி ஒரு பொருள் உபயோகிப்பவருக்கு விற்பனை செய்யப்படும்போது, பொருளின் பெயா், தயாரிப்பாளா் பெயா், பொருளில் சோ்க்கப்பட்டுள்ள பொருளின் அளவு, விலை, காலாவதியாகும் நாள் ஆகியவை கட்டாயம் அச்சிடப்பட வேண்டும்.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டா்களில் சட்டமுறை எடையளவுகள்(பொட்டலப் பொருள்கள்) விதிகள் பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய விவங்களைக் குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com