விநாயகா் சிலைகளை வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளா்த்த கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது
விநாயகா் சதுா்த்தி கட்டுப்பாடுகளை தளா்த்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
விநாயகா் சதுா்த்தி கட்டுப்பாடுகளை தளா்த்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அதன் விவம்: ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில் வரும் 31-இல் சதுா்த்தி விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, பள்ளிபாளையம் நகர, ஒன்றிய பகுதிகளில் வருவாய்த் துறைக்கு உள்பட்ட இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. செப்.4-ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் வைக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

இதற்கு வருவாய்த் துறை, காவல்துறை சாா்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை, தடையில்லா சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை உடனடியாக நீக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விநாயகா் சதுா்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com