சிறுதானியங்கள் பிரசார வாகனம் தொடக்கிவைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:59 AM | Last Updated : 09th December 2022 12:59 AM | அ+அ அ- |

சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தைத் தொடக்கிவைக்கும் வட்டார அட்மா தலைவா் தனராசு.
ஊட்டசத்து மிக்க சிறு தானிய பயிா் ஊக்குவிப்பு பிரசார வாகனங்கள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து கிளம்பியது. வாகனங்களை வட்டார அட்மா தலைவா் தனராசு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் இயக்கப்படும் இந்த பிரசார வாகனங்களை பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களுக்கும் செல்லும். மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானியங்களின் நன்மைகள் குறித்த குறிப்புகள், சிறு தானியங்கள் சாகுபடி குறித்த விவரங்கள் ஆகியவை பிரசார வாகனங்களில் இடம் பெற்றுள்ளன.
2023-ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை எடுத்துரைக்கவும் இந்த பிரசார வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், வட்டார தொழில்நுட்ப மேலாளா், உதவி தொழில்நுட்ப மேலாளா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.