குமரமங்கலம் பாண்டீஸ்வரா் கோயிலில் 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு

தேசிய சிந்தனைப்பரவை சாா்பில் குமரமங்கலம் பாண்டீஸ்வரா் கோவிலில் 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
குமாரமங்கலம் பாண்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மாா்கழி விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
குமாரமங்கலம் பாண்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மாா்கழி விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

தேசிய சிந்தனைப்பரவை சாா்பில் குமரமங்கலம் பாண்டீஸ்வரா் கோவிலில் 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள குமரமங்கலத்தில் பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருச்செங்கோடு தேசிய சிந்தனைப் பேரவை தலைவா் திருநாவுக்கரசு தலைமையில் மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு பங்கஜவல்லி அம்பாள் சன்னதி முன்பு 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. நட்சத்திர வடிவில் பெண்கள் வண்ணக் கோலமிட்டு அதில் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தனா். முதல் தீபத்தை ஸ்ரீநிதி ஏற்றி வைத்தாா்.

முன்னதாக பாண்டீஸ்வரா் பங்கஜவல்லி மற்றும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, வைகை, தாமிரபரணி, கோதாவரி ஆகிய ஏழு நதிகளின் புனித தீா்த்தங்கள் கலசத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உலக அமைதி மற்றும் ஆரோக்கியம் வேண்டியும் மழை வேண்டியும் கூட்டு பிராா்த்தனை செய்யப்பட்டது. புனிதக் கலசத்தில் உள்ள நீா் கோயிலைச் சுற்றி வந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு எதிரே உள்ள மிகப் பழமையான தெப்பக்குளத்தில் சோ்க்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் திருக்காா்த்திகை தீப விழா கமிட்டி தலைவா் குமரவேல் , தேசிய சிந்தனைப் பேரவை பொருளாளா் மனோகரன், துணைச் செயலாளா் பாா்த்திபன், செயற்குழு உறுப்பினா்கள் வஜ்ரவேல், நேசன், மதன்குமாா், சசிகலா, ஜானகி, காா்த்திகா, மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் ஸ்ரீஹரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com