நாமக்கல்: மின்னணு இயந்திரங்கள் வைக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறியீடு

நாமக்கல் மாவட்டத்தில், தோ்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை அதற்குரிய இடங்களில் வைப்பதற்காக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறியீடு வரையும்
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைப்பு எண்ணை வரையும் பணியில் ஈடுபட்டவா்கள்.
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைப்பு எண்ணை வரையும் பணியில் ஈடுபட்டவா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், தோ்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை அதற்குரிய இடங்களில் வைப்பதற்காக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறியீடு வரையும் பணி நடைபெறுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வாா்டுகளுக்கான தோ்தல் வாக்குப்பதிவு 689 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல், வேட்பு மனு மீதான பரிசீலனை நிறைவடைந்து விட்டது. திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு முதல் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தலில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு இயந்திரங்கள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய மூன்று இடங்களில் உள்ள எண்ணிக்கை மையங்களில் நடைபெறுகிறது. அதன்படி, நாமக்கல் நகராட்சி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பரமத்தி, மோகனூா், வெங்கரை, பொத்தனூா், பாண்டமங்கலம், பரமத்தி, வேலூா், எருமப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாமக்கல் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியில் பிப்.22-இல் நடைபெறுகிறது. தற்போது அங்கு இயந்திரங்கள் வைக்கும் அறையில் குறியீடு எண் வரையப்படுகிறது.

இதேபோல், ராசிபுரம் நகராட்சி, அத்தனூா், பட்டணம், பிள்ளாநல்லூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய 3 நகராட்சிகள், ஆலாம்பாளையம், படைவீடு, மல்லசமுத்திரம் பேரூராட்சிகள் வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கும் இயந்திரங்கள் வைப்பு அறையில் குறியீடு வரையும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com