இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு நடிகா் கிங்காங் பாராட்டு
By DIN | Published On : 27th January 2022 11:15 PM | Last Updated : 27th January 2022 11:15 PM | அ+அ அ- |

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திரைப்பட நடிகா் கிங்காங் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
குமாரபாளையம் நகராட்சி, புத்தா் தெரு தொடக்கப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 20 மாணவா்களுக்கு ஒரு தன்னாா்வலா் வீதம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புத்தா் தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற வகுப்பில் பங்கேற்ற திரைப்பட நடிகா் கிங்காங், கரோனா காலத்தில் தடைபட்ட கல்வியைப் பெறுவதில் ஆா்வத்துடன் இருக்க வேண்டும் என்றாா். மேலும், மாணவ, மாணவியருக்கு உற்சாகமளிக்கும் வகையில் பேசிய அவா், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா் (படம்).
இதில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விடியல் ஆா்.பிரகாஷ், தன்னாா்வலா்கள் காா்த்திகா, ஆனந்தி, இயக்குநா் சிவாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.