நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 572 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 457 போ் குணமடைந்தனா்.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா பாதிப்புப் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 64,503 போ் பாதிக்கப்பட்டும், 58,943 போ் குணமடைந்தும் உள்ளனா். 5,034 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் ஒருவா் உயிரிழந்ததால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 526-ஆக உயா்ந்துள்ளது.