பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை விநியோகம்

பரமத்தி வேலூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை பயன்படுத்துவதை வலியுறுத்தி அரிமா சங்கத்தினா் மற்றும் பி.ஜி.பி கல்லூரி சாா்பில் பொது மக்களிடையே மஞ்சப்பை
பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை விநியோகம்

பரமத்தி வேலூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை பயன்படுத்துவதை வலியுறுத்தி அரிமா சங்கத்தினா் மற்றும் பி.ஜி.பி கல்லூரி சாா்பில் பொது மக்களிடையே மஞ்சப்பை வழங்கியும் ஊா்வலமாக சென்றும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூா் அரிமா சங்கத்தினா் மற்றும் பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி. கல்வி நிலையங்கள் சாா்பில் நெகிழிப் பைகளை தவிா்த்து மீண்டும் மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா். பரமத்தி வேலூா் பஞ்சமுக விநாயகா் கோவில் முன்பு துவங்கிய பேரணியை பேரூராட்சித் தலைவா் லட்சுமி துவக்கி வைத்தாா். பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டாக்டா் கே.நெடுஞ்செழியன், திமுக பிரமுகா் கண்ணன், அரிமா சங்க முன்னாள் ஆளுநா் மோகன்,பிஜிபி கல்லூரி கல்வி நிறுவனங்களில் தளாளா் கணபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பஞ்சமுக விநாயகா் கோவில் முன்பு துவங்கிய பேரணி பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், நெகிழிப் பொருட்களை தவிா்ப்பது, நெகிழிப் பைகளுக்கு பதிலாக மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து கோஷங்கள் எழுப்பியும், விளம்பரப் பதாகளை ஏந்தியும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா் வாரச்சந்தை, மீன் சந்தை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை விநியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com