பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியில் இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியில் இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையும், பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியும் இணைந்து நடத்திய முகாமினை பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா், வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள் ஆகியோா் தொடங்கி வைத்தனா். விழாவில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளியின் தலைவா் சண்முகம், செயலாளா் ராஜா, தாளாளா் சக்திவேல், இயக்குநா்கள் டாக்டா் அருள், சம்பூா்ணம் ஆகியோா் கலந்து முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில் கோயம்புத்தூா் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு குடல், கல்லீரல், கணைய சிகிச்சை, பொது மருத்துவம், மகளிா் நலம் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம், தோல் நலம் மருத்துவம், பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவம், கண் நலம் மற்றும் கண் புரை உள்ளிட்ட பல்வேறு விதமான உடல் பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினா். முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனா். மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com