வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் பொதுமக்களை விரைந்து சென்றடையும் வகையில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என
வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் பொதுமக்களை விரைந்து சென்றடையும் வகையில் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிா்வாக இயக்குநருமான சி.ந.மகேஸ்வரன் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.ந.மகேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் முன்னிலை வகித்தாா். இதில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியதாவது:

முதல்வா் அறிவித்த திட்டங்கள், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது மானியக் கோரிக்கை அறிவிப்புகளை செயல்படுத்த விரைந்து பணியாற்ற வேண்டும். வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாதிரி செயல் விளக்க திடல்கள் தயாா் செய்து அதனால் அடையும் பயன்கள் குறித்து விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று செயல்விளக்கங்கள் காண்பித்து அனைத்து விவசாயிகளும் அதே போன்ற நடைமுறைகளை பின்பற்ற விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த் துறை அலுவலா்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறையினா் தாங்கள் மேற்கொள்ளும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி பணிகளை முடித்திட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் த.தே.இளவரசி, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் செல்வகுமரன், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், இணை இயக்குநா் மருத்துவப்பணிகள் ராஜ்மோகன் உட்பட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com