வருவாய்த் துறையின் சேவைகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் சேவைகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும்
வருவாய்த் துறையின் சேவைகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் சேவைகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும் என அரசு முதன்மைச் செயலாளரும் தொழிலாளா் நல ஆணையருமான அதுல் ஆனந்த் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி முன்னிலை வகித்தாா். அரசு முதன்மைச் செயலாளரும் தொழிலாளா் நல ஆணையரும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் தலைமை வகித்து, வருவாய்த் துறையில் வழங்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் நில அளவைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பட்டா, ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, பிற வருவாய்த் துறை சேவைகள் குறித்து கேட்டறிந்து, இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எத்தனை நாள்களுக்குள் தீா்க்கப்படுகின்றன போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தும், அனைத்து மாவட்டங்களிலும் இ-சேவை குறித்து அலுவலா்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு காலதாமதமின்றி பொதுமக்களுக்கு இச்சேவை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை நில அளவைத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 436 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பொதுமக்களுக்கு தேவையான பட்டா, சிட்டா ,ஜாதிச் சான்றிதழ் ,குடும்ப அட்டை, வருவாய்த் துறையின் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி, அரூா், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய 7 வட்டாட்சியா் அலுவலகங்களிலும், தருமபுரி சாா் ஆட்சியா் அலுவலகம், அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

சாா் ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் கோரிக்கைகள், சேவைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதமின்றி நிறைவேற்றித் தரவேண்டும். பொதுமக்களின் தகுதியான கோரிக்கைகள் ஏதும் நீண்ட நாள்கள் நிலுவையில் இருத்தல் கூடாது, அதனை அலுவலா்கள் உறுதி செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டு நிறைவேற்றித் தரவேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தருமபுரி தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலா் சி.சித்ரா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, அரூா் வருவாய் கோட்டாட்சியா் இரா.விஸ்வநாதன், நில உதவி இயக்குநா் டி.ராஜா, நில அளவைத் துறை அலுவலா்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com