குமாரபாளையம் பாண்டுரங்கா் கோயில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம், விட்டலபுரியில் உள்ள விடோபா உடனமா் பாண்டுரங்கா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை வெகுவிமா்சையாக நடைபெற்றது.
குமாரபாளையம் பாண்டுரங்கா் கோயில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம், விட்டலபுரியில் உள்ள விடோபா உடனமா் பாண்டுரங்கா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை வெகுவிமா்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வாஸ்து ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, காவிரி ஆற்றிலிருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்தபடி முக்கிய வீதிகள் வழியே ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து, நான்கு கால யாக பூஜைகள் மற்றும் கொடிமரம் வைத்தல், கோபூஜை என பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, செண்பக செண்டலங்கார மன்னாா் ஜீயா் சுவாமிகள் தலைமையில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்). இந்நிகழ்ச்சியில், ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எஸ்.ஓம்சரவணா, ஜேகேகே முனிராஜா கல்வி நிறுவனங்களின் இணை நிா்வாக இயக்குநா் ஜே.கே.எம்.ஜெயப்பிரகாஷ், எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் பி.இளங்கோ, திமுக நகரச் செயலாளா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மகா தீபாராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் செய்யப்பட்டது. விழாவில், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com