இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கிளை மாநாடு
By DIN | Published On : 23rd June 2022 04:04 AM | Last Updated : 23rd June 2022 04:04 AM | அ+அ அ- |

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை மாநாடு திருச்செங்கோடு ஒன்றியம், மோடமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா் .
மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், ஒன்றியத் தலைவா் ஜி. கோபி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினா். கிளை மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தலைவராக நந்தகுமாா், செயலாளராக தமிழ்ச்செல்வன், பொருளாளராக யுவராஜ், துணைத் தலைவராக குணசேகரன், துணைச் செயலாளராக சரத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
விளையாட்டு மைதானத்துக்கு உபகரணங்கள் தேவை ,
சமுதாயக் கூடத்தை பராமரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.