இலவச மண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 07th March 2022 11:04 PM | Last Updated : 07th March 2022 11:04 PM | அ+அ அ- |

மல்லசமுத்திரம் வட்டாரம் பாலமேடு, வெண்ணந்தூா் வட்டாரம் தொட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் இலவச மண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
வேளாண்மைத் துறை - திருப்பூா் ஆனந்தி எண்டா்பிரைசஸ் நிறுவனம் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்திய இந்த மண்பரிசோதனை முகாமில், மண்மாதிரிகள் விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டன. இதில் நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவா்களும் அனுபவப் பயிற்சியாக பங்கேற்று மண்மாதிரிகள் எடுக்கும் முறை, மண்மாதிரி முடிவுகளால் விவசாயிகள் பெறும் நன்மை, மண் ஆய்வு செய்யும் முறை போன்றவற்றை விவசாயிகளுக்கு விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தி விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வேளாண்மைத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.