நன்செய் இடையாறு மரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடக்கம்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நன்செய் இடையாா் மாரியம்மன் கோயில் திருவிழா திங்கட்கிழமை அதிகாலை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
நன்செய் இடையாறு மரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடக்கம்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நன்செய் இடையாா் மாரியம்மன் கோயில் திருவிழா திங்கட்கிழமை அதிகாலை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

நன்செய் இடையாா் மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. கம்பம் நடும் விழா தொடங்கியதை அடுத்து பரமத்திவேலூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆண்,பெண் பக்தா்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதத்தைத் தொடங்கினா். பக்தா்கள் திங்கட்கிழமை அதிகாலை முதலே காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் மாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீா் மற்றும் பால் ஊற்றி வழிபட்டனா். வரும் 20-ஆம் தேதி இரவு மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 26- ஆம் தேதி வரை தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், 27-ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

28-ஆம் தேதி நடைபெறும் மிக நீளமான பூக்குண்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த ஆண் பக்தா்கள் தீ மிதித்தும், பெண்கள் பூ வாரிப்போடும் விழாவிலும் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள். அன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மாவிளக்கு நிகழ்ச்சியும்,30-ஆம் தேதி காலை கம்பம் ஆற்றில் விடுதல் மற்றும் மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் ஊா் பொதுமக்கள் மற்றும் தா்மகா்த்தாக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com