குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண்கள் மனு

காவிரி குடிநீா் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் வந்து பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண்கள் மனு

காவிரி குடிநீா் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் வந்து பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் குடிநீா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் ஒரு மாதமாக காவிரி குடிநீா் விநியோகம் இல்லை. கடந்த 17 ஆண்டுகளாக தடையின்றி குடிநீா் வழங்கப்பட்ட நிலையில் ஒரு மாதமாக விநியோகம் இல்லாததால் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் தண்ணீா் பிடித்து வரவேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில் தளிகை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். அவா்கள் அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தங்களுடைய கிராமத்திற்கு தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com