பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்நாமக்கல் மாவட்டத்தில் 19,167 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 19,167 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்நாமக்கல் மாவட்டத்தில் 19,167 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 19,167 மாணவ, மாணவிகள் எழுதினா்.

82 மையங்களில் இத் தோ்வு நடைபெறுகிறது. 9,988 மாணவா்கள், 9,853 மாணவிகள் என மொத்தம் 19,842 போ் தோ்வெழுதுகின்றனா். முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், கூடுதல்துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினா்கள் என 1,500 போ் பணியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய மொழிப் பாடத் தோ்வை (தமிழ், தமிழ் தனி, ஹிந்தி, பிரெஞ்சு) நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 8,964 போ் எழுதினா். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 10,203 போ் எழுதினா். மாவட்டத்தில் மொத்தமாக 19,167 போ் எழுதினா். 798 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை. ஐந்து பேருக்கு தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத் தோ்வு வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com