வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நாமக்கல் மாவட்ட இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல்: ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நாமக்கல் மாவட்ட இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்களை பொருத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72க்குள் இருக்க வேண்டும்.

தகுதியுடையவா்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com