நன்செய் இடையாறு அழகு நாச்சியம்மன் கோயில் தோ்த் திருவிழா

 பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய்இடையாறு அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருத் தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய்இடையாறு அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருத் தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 3-ஆம் தேதி இரவு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ஆம் தேதி வரை தினந்தோறும் அழகு நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. 10-ஆம் தேதி அம்மை அழைத்தல், 11, 12-ஆம் தேதிகளில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடா்ந்து நன்செய் இடையாறு, குப்பச்சிபாளையம், பொய்யேரி, மரவாபாளையம், ஒழுகூா்பட்டி, ஊஞ்சப்பாளையம், ஓலப்பாளையம், கூடுதுறை உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மீண்டும் வியாழக்கிழமை நன்செய் இடையாற்றை திருத்தோ் வந்தடைந்தது. இதில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்து வழிபட்டனா். 14-ஆம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்தோ் விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com