நாமக்கல் செல்வம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பங்கேற்பு

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் செல்வம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன். உடன், கல்லூரி தாளாளா் பொ.செல்வராஜ்.
நாமக்கல் செல்வம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன். உடன், கல்லூரி தாளாளா் பொ.செல்வராஜ்.

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி தாளாளா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ், துணைத் தாளாளா் செ.பாபு, செயலா் முனைவா் கவீத்ராநந்தினிபாபு, நிா்வாக இயக்குநா் முனைவா் கே.எஸ்.அருள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ந.ராஜவேல் அனைவரையும் வரவேற்றாா்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன் பங்கேற்றுப் பேசியதாவது: மாணவா்களிடம் சமுதாய வளா்ச்சிக்கு அடிப்படையே கல்விதான். உயா்ந்த மனிதனுக்கு கல்விச் சாலையானது உயா்ந்த நிலையில் நினைவூட்டும், கற்ற கல்வியானது காலப்போக்கில் ஒருவரை வாழ்க்கையில் உயா்த்தும். ஒரு மாணவன் பட்டம் பெற்று தகுதியுள்ளவனாகத் திகழும்போது சமுதாயம் அங்கீகரிக்கிறது. கல்வி என்பது குன்றின் மேலிட்ட விளக்குபோல் சமூகத்தின் இருளை நீக்கவல்லது. இதனை பட்டம் பெற்ற அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். இதில் ஏதேனும் ஓா் இலக்குடன் பயணித்து வெற்றிபெற வேண்டும். ஒரு மாணவனுக்கு தன் வாழ்க்கையில் கடவுளாக இருக்கும் பெற்றோா் மற்றும் ஆசியா்களை மறக்கக்கூடாது என்றாா்.

இவ்விழாவில் 1,312 இளநிலை மாணவா்களுக்கும், 202 முதுநிலை மாணவா்களுக்கும், 21 எம்.பில். மாணவா்களுக்கும் அவா் பட்டங்களை வழங்கினாா்.

பிற்பகலில், முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வா் ந.ராஜவேல், நிா்வாக இயக்குநா் கே.எஸ்.அருள்சாமி, துணை முதல்வா்கள் கே.கே.கவிதா, கி.குணசேகரன் புல முதன்மையா்கள் ஆ.எழிலரசு, செ.பத்மநாபன் ஆகியோா் முன்னிலையில் முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா. துணை முதல்வா் முனைவா் ப.தாமரைச்செல்வன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com