களப் பயணம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு களப் பயணம் வந்த மாணவ, மாணவியருடன் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு களப் பயணம் வந்த மாணவ, மாணவியருடன் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை களப் பயணம் மேற்கொண்டனா். அவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கலந்துரையாடி, களப் பயணத்தின் வழியாக பெற்ற அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

உயா்கல்வி பயில்வதற்கு ஆா்வம் ஊட்டும் வகையில், அருகில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி களப் பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 98 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 940 மாணவ, மாணவியா் 10 கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி குறித்த தகவல்கள் கல்லூரி பேராசிரியா்களால் எடுத்துரைக்கப்பட்டன. கல்லூரி ஆய்வகம், கணினி அறிவியல் உள்ளட்டவற்றை நேரில் பாா்வையிட்டனா். இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com