கீரம்பூா் அரசு ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்ப மையம் திறப்பு

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்.
நவீன தொழில்நுட்ப மையம் திறப்பு விழாவையொட்டி குத்துவிளக்கேற்றி வைக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
நவீன தொழில்நுட்ப மையம் திறப்பு விழாவையொட்டி குத்துவிளக்கேற்றி வைக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா். இதனையொட்டி அங்கு நடைபெற்ற விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற முன்னணி தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாகத் தரம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.2,877.43 கோடி செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. இங்கு, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு பல்வேறு நவீன திறன் பயிற்சிகள் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழிற்நுட்ப மையத்தின் மூலம் தற்போது பயிற்சி பெற்று வரும் 176 மாணவ, மாணவிகளோடு கூடுதலாக 104 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனா் என தொழிற்பயிற்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.ஜி.சரவணன், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்(பொ) செல்வம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com