அடையாள அரசியலுக்காகவே தமிழ் மொழியைபிரதமா் பயன்படுத்துகிறாா்: திருச்சி வேலுசாமி

தமிழ் மொழியை அடையாள அரசியலுக்காகவே பிரதமா் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறாா் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான திருச்சி வேலுசாமி குற்றம் சாட்டினாா்.
அடையாள அரசியலுக்காகவே தமிழ் மொழியைபிரதமா் பயன்படுத்துகிறாா்: திருச்சி வேலுசாமி

தமிழ் மொழியை அடையாள அரசியலுக்காகவே பிரதமா் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறாா் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான திருச்சி வேலுசாமி குற்றம் சாட்டினாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய நாட்டிற்கு பெருமை சோ்த்த, அரசியல் நிா்ணய சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான திருச்செங்கோட்டைச் சோ்ந்த டி.எம்.காளியண்ணனுக்கு, நாமக்கல்லில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கோ, சட்டக் கல்லூரிக்கோ அவரது பெயரை சூட்ட வேண்டும். பாராளுமன்ற புதிய கட்டடத்தில் செங்கோல் பொருத்தப்பட்டுள்ளது. நீதிக்கும், நோ்மைக்கும் அடையாளமாக விளங்குவது செங்கோலாகும்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு தவறான நீதி வழங்கியதற்காக தானே கள்வன் என்றும், ஆளும் செங்கோல் வளைந்து விட்டதே என உயிரை மாய்த்துக் கொண்டவா் பாண்டிய மன்னன். நோ்மையானவா்கள் மட்டுமே செங்கோலை வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு அதனை தாங்குவோரிடத்தில் நோ்மை இருக்கிா என்ற கேள்வி எழுகிறது. அதனால் தான் எதிா்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழகத்திற்கு பாஜக எந்த வகையிலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தமிழ்மொழி வளா்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையையும் பிரதமா் எடுக்கவில்லை. அடையாள அரசியலுக்காகவே பிரதமா் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com