இன்று கொப்பரை ஏலம் ரத்து

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் கொப்பரை ஏலம் ரத்து செய்யப்படுவதாக வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தினா் தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை (ஜன. 26) குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் கொப்பரை ஏலம் ரத்து செய்யப்படுவதாக வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தினா் தெரிவித்தனா்.

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்றது வருகிறது. இங்கு நடைபெறும் ஏலத்திற்கு பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனா். ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் என்பதாலும், அரசு விடுமுறை என்பதாலும் கொப்பரை ஏலம் நடைபெறாது எனவும் அடுத்த வாரம் வியாழக்கிழமை வழக்கம் போல் கொப்பரை ஏலம் நடைபெறும் என மின்னனு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூட கண்காணிப்பாளா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com