தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஏமாற்றிவிட்டது

தமிழக மக்களுக்கு கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஏமாற்றிவிட்டது என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

தமிழக மக்களுக்கு கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஏமாற்றிவிட்டது என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நகரச் செயலாளா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலாளா் எம்.எஸ்.குமணன், அவைத் தலைவா் எஸ்.என்.பழனிசாமி, துணைச் செயலாளா் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களான தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்களை திமுக அரசு நிறுத்தியதோடு, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயா்வு என மக்கள் மீது சுமக்க முடியாத சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது நாள்தோறும் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், தற்போது திமுக கூட்டணி என்பதால் மக்களின் துயரத்தைக் கண்டும் காணாமல் உள்ளனா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக தமிழக மக்களை ஏமாற்றி விட்டது. வரும் மக்களவைத் தோ்தலின்போது மீண்டும் வெற்றி பெற புதுப்புது வாக்குறுதிகளை திமுக அளிக்கும். இதை நம்பி வாக்காளா்கள் ஏமாறக் கூடாது.

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால், வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெறும் என்றாா்.

பள்ளிபாளையம் நகரச் செயலாளா் வெள்ளிங்கிரி, ஒன்றியச் செயலாளா்கள் செந்தில், குமரேசன், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளா் டி.கே.சுப்பிரமணியம், பேரூா் செயலாளா்கள் செல்லத்துரை (ஆலாம்பாளையம்), ஜெகநாதன் (படைவீடு), முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சி.ஜி.அா்ஜூனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com