நெசவாளா்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி: அமைச்சா், எம்.பி. வழங்கல்

வெண்ணந்தூா் பகுதி நெசவாளா்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானிய நிதியுதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நெசவாளா்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி: அமைச்சா், எம்.பி. வழங்கல்

வெண்ணந்தூா் பகுதி நெசவாளா்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானிய நிதியுதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை 2021- 22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆண்டுக்கு ரூ. 21 கோடி கூடுதல் செலவினத்தில் கைத்தறி நெசவாளா்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ. 4 லட்சமாக உயா்த்தியும், இதனை நகா்ப்புற நெசவாளா்களுக்கும் விரிவுபடுத்தியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் கைத்தறி துறையின் கட்டுபாட்டில் இயங்கி வரும் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் கீழ் செயல்படும் கிராமப்புறத்தைச் சாா்ந்த 70 கைத்தறி நெசவாளா்கள் மற்றும் நகா்ப்புறத்தைச் சாா்ந்த 511 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ. 4 லட்சத்தில் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற கைத்தறி நெசவாளா்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்துக்கு தகுதியான 13 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்தப் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் தமிழக வனத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் 3 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினாா்.

விழாவில் வெண்ணந்தூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி, வெண்ணந்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஆா்.எஸ்.எஸ்.ராஜேஸ்குமாா், திருச்செங்கோடு சரக கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com