மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், ரங்கோலி கோலமிட்டு மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வை வியாழக்கிழமை ஏற்படுத்தினா்.

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இந்திய தோ்தல் ஆணையம் அறிவுரையின்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இறுதி நிகழ்ச்சியாக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கௌா் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா முன்னிலை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பெண் ஊழியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினரால் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணா்வு கோலங்கள் இங்கு வரையப்பட்டிருந்தன.

இதில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com