வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், வெப்ப அயா்ச்சி காரணமாக கோழிகள் இறக்க நேரிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 66.1 டிகிரியாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழையும் காணப்படும். பகல் வெப்பம் 104 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை வெப்ப அயா்ச்சி நோயால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோடைகாலப் பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். வெப்ப அயா்ச்சியைக் குறைக்க தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். வெயில் குறைந்த அதிகாலை, மாலை வேளைகளில் கோழிகளுக்கு தீவனமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com