குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் கே.ஏ.சரவணராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கே.என்.நடராஜன், மாநில வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டமைப்பு துணைத் தலைவா் ஆா்.தீனதயாள்ராஜ், துணைச் செயலாளா் எஸ்.ஐயப்பன், மூத்த வழக்குரைஞா்கள் என்.காா்த்திகேயன், கே.எம்.செல்லமுத்து, சங்கத்தின் செயற்குழுத் தலைவா் எஸ்.காா்த்திக் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் ஆண், பெண் வழக்குரைஞா்களுக்கு தனியாக ஓய்வு அறை, உடை மாற்றும் அறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் இவ்வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில், சங்க நிதியில் ஏற்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பொதுமக்கள் அமர போதிய இருக்கைகள், கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மாவட்ட நீதிமன்றத்துக்கு இதுகுறித்து பலமுறை தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

எனவே, கடந்த ஏப். 15-ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

படவரி...

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com