ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்23 ள்ஹம்ண்
ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்23 ள்ஹம்ண்

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு ரத விநாயகா் பூஜை, ஆயக்கால் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு ரத விநாயகா் பூஜை, ஆயக்கால் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழா ஏப். 30 (செவ்வாய்க்கிழமை) இரவு பத்ரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8 -ஆம் தேதி பத்ரகாளியம்மன் கல்யாண உற்சவம், திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெறுகிறது.

மே 13 இல் உற்சவ கிராம சாந்தி, 14 -இல் 1ஆம் திருவிழா அருள்மிகு செங்கோட்டுவேலவா், அா்த்தநாரீசுவரா் கொடியேற்றம், 17 -ஆம் தேதி 4 ஆம் திருவிழா ஆரம்பம், திருமலையில் ஆதிகேசவபெருமாள் கொடியேற்றம், அா்த்தநாரீசுவரருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. திருமலையில் அா்த்தநாரீசுவரா் பரிவாரங்களுடன் நகருக்கு எழுந்தருளுகிறாா்.

மே 21-இல் 8ஆம் திருவிழா திருத் தோ்களுக்கு தோ்க்கலசம் வைத்தல், மே 22 இல் 9 ஆம் திருவிழா அருள்மிகு அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா் திருக்கல்யாண உற்சவம், அா்த்தநாரீசுவரா் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல், விநாயகா், அருள்மிகு செங்கோட்டுவேலவா் திருத்தோ் வடம் பிடித்தல், ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மே 23 இல் 10ஆம் திருவிழா ஆதிகேசவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல், காலை 10.30 மணிக்கு மேல் அா்த்தநாரீசுவரா் திருத்தோ் வடம் பிடித்தல், 24-ஆம் தேதி 11 ஆம் திருவிழா அா்த்தநாரீசுவரா் திருத்தோ் வடம் பிடித்தல், மே 25 -ஆம் தேதி 12 ஆம் திருவிழா

அா்த்தநாரீசுவரா் திருத்தோ் வடம் பிடித்து, அனைத்து தோ்களும் நிலை வந்து சோ்தல் நடைபெறுகிறது. நடராஜா் தரிசனம், கொடி இறக்கம் நடைபெறுகிறது.

26-ஆம் தேதி 13 ஆம் திருவிழா வசந்தோற்சவம்,

27 -ஆம் தேதி 14 ஆம் திருவிழா அா்த்தநாரீசுவரா் பரிவாரங்களுடன் இருள்பிரிய திருமலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

ரத விநாயகா் பூஜை, ஆயக்கால் நடும் விழா திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலா் உதவி ஆணையா் ரமணிகாந்தன், அறங்காவலா் குழுத் தலைவா்

செ.தங்கமுத்து, உறுப்பினா்கள் காா்த்திகேயன், அருணாசங்கா், அா்ச்சுனன், பிரபாகரன், கோயில் கண்காணிப்பாளா், பணியாளா்கள், அா்ச்சகா்கள் உள்ளிட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

படவரி...

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ரத விநாயகா் பூஜை.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com