சிறப்பு அலங்காரத்தில் வெங்கமேட்டில் உள்ள வல்லப கணபதி.
சிறப்பு அலங்காரத்தில் வெங்கமேட்டில் உள்ள வல்லப கணபதி.

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

பரமத்தி வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனா். அதேபோல பரமத்தி வேலூா், சக்தி நகரில் உள்ள விநாயகா், செட்டியாா் தெருவில் உள்ள சக்தி விநாயகா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள வல்லப கணபதி, வேலூா் காவிரிக் கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகா், பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில். உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகா், பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com