கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 29 முதல் மே 13-ஆம் தேதி வரையில் மொத்தம் 15 நாள்கள் நடைபெறவுள்ளது. கால்பந்து, வில் வித்தை, தடகளம், வாள்சண்டை, இறகுபந்து, கையுந்துபந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

நாமக்கல் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

இதில் 18 வயதிற்கு உள்பட்ட மாணவ, மாணவியா், மாணவா் அல்லாதோா் கலந்து கொள்ளலாம். பயிற்சி கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்.

இதுவரை 64 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்காக சோ்ந்துள்ளனா். அவா்களுக்கு திங்கள்கிழமை பல்வேறு வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரின் கைப்பேசி எண்: 74017-03492, மற்றும் கையுந்து பயிற்சியாளா் 85086- 41786 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com