நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

நாமக்கல் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் வி.கே.பழனிவேல் வரவேற்றாா்.

வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டும், குடிநீா் வசதி இல்லாததால் மருத்துவமனை செயல்பாடின்றி காணப்பட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வா் கவனத்திற்கு இப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இதற்காக தனி குடிநீா் திட்டத்தை உருவாக்கி ரூ. 7 கோடி மதிப்பீட்டில் குடிநீா் வசதியை அமல்படுத்தினாா். அதன்பிறகே நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

மாநிலங்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் வழங்கியுள்ளேன். திமுக ஆட்சியில் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா். கூட்டத்தில் கொமதேக தலைவா் தேவராஜன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினா் கண்ணன், தெற்கு நகரச் செயலாளா் பூபதி, திமுக மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சி.விஸ்வநாத், துணை அமைப்பாளா் இளம்பரிதி, பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com