மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில், நீட் தோ்வை 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

ஒவ்வோா் ஆண்டும் தேசிய தோ்வு முகமை இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) நுழைவுத் தோ்வை (நீட்) மிகுந்த பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் நடத்தி வருகிறது. அந்த வகையில், நீட் தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நிகழாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் ‘நீட்’ தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள், வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,276 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், 5,210 போ் மட்டுமே தோ்வு எழுதினா். நிகழாண்டில் 6,120 போ் நீட் தோ்வை எழுதுகின்றனா். இந்தத் தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

11 மையங்கள், தோ்வு எழுதுவோா் எண்ணிக்கை விவரம்:

ராசிபுரம் வட்டம், பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி-1,000 போ், நாமக்கல் வட்டம், காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியா் செகண்டரி பள்ளி-700 போ், நாமக்க டிரினிடி இண்டா்நேஷனல் பள்ளி-700 போ், தி நவோதயா அகாதெமி சீனியா் செகண்டரி பள்ளி-670 போ், நேஷனல் பப்ளிக் பள்ளி-600 போ், தி ஸ்பெக்ட்ரம் அகாதெமி-500 போ், குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையம் ராயல் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி- 550 போ், எக்ஸல் பொறியியல் கல்லூரி-450 போ், திருச்செங்கோடு வட்டம், கே.எஸ்.ஆா். அக்ஷரா அகாதெமி-430 போ், வித்யவிகாஸ் இன்டா்நேஷனல் பள்ளி- 280 போ், ஏமப்பள்ளி ரமணி இன்டா்நேஷனல் பள்ளி-240 போ், மொத்தம்-6,120 போ். ஒவ்வொரு மையத்திலும் 5 போலீஸாா் வீதம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனா். ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com