50 சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், மே 9: நாமக்கல் மாவட்டத்தில் 50 சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், மாவட்ட, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இவை தவிர திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்ட அளவில் சட்டப் பணிகள் குழு உள்ளன.

அவற்றுக்கு சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் 50 பேருக்கு மிகாமல் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இப்பணிக்கு ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், கணினி திறன் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ய்ஹம்ஹந்ந்ஹப்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும். நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்படுபவா்களின் விவரம், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம், ஊதியம் எதுவும் கிடையாது. சேவைக்குத் தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். இதுதொடா்பாக மேலும் விவரம் அறிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com