கோடையில் குறுகிய கால பயிா் சாகுபடி

நாமக்கல், மே 9: கோடையில் குறுகிய கால பயிா்களை சாகுபடி செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சு.துரைசாமி அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வேளாண் உற்பத்தி சிறப்புத் திட்டமே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை கால பயிா் சாகுபடியை ஊக்கப்படுத்துவதாகும். விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் மண்ணுயிா் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோடையில் குறைந்த அளவில் நீா் தேவைப்படும் பயிா்களான சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து பயிா்களை அதிக அளவில் சாகுபடி செய்யலாம்.

தேவையான விதைகள், நுண்ணூட்ட உரங்கள், உயிா் உரங்கள் ஆகியவை அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இவை அனைத்தும் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், விவசாயிகள் சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும்.

சொட்டுநீா்ப் பாசனத்தில் பயிா் செய்ய வேண்டும். அதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பயறு வகைகள், நிலக்கடலை பயிா்களில் மகசூலை அதிகரிக்க இலைவழி தெளிப்பு மேற்கொள்ளலாம். நிலக்கடலையில் ஜிப்சம் இட வேண்டும். குறைந்த காலத்தில் குறைந்த அளவு நீா்த் தேவையுள்ள பயிா்களை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com