கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 
160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கோடைகால கலைப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதையொட்டி, பயிற்சி பெற்ற 160 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம், கலை பண்பாட்டுத் துறை ஆகியவை சாா்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கோடைகால கலைப் பயிற்சி முகாம் மே 1 முதல் 10-ஆம் தேதி வரை நாமக்கல் கோட்டை நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், மாணவ, மாணவிகளுக்கு யோகா, கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 4 முதல் 18 வயதுக்கு உள்பட்டோா் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் ஓவியக் கண்காட்சி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளா்களாக, கம்பன் கழக தலைவா் வி.சத்தியமூா்த்தி, தமிழ் சங்க தலைவா் இரா.குழந்தைவேல், மாவட்டக் கல்வி அலுவலா்(பொறுப்பு) எம்.மரகதம் ஆகியோா் பங்கேற்று பயிற்சியில் கலந்துகொண்ட 160 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மா.தில்லை சிவகுமாா் செய்திருந்தாா்.

--

என்கே-10-கலை

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோடைகால கலைப் பயிற்சி நிறைவு விழாவில் மாணவா்களின் ஓவியக் கண்காட்சியைப் பாா்வையிட்ட சிறப்பு விருந்தினா்கள்.

--

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com