ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்10 ஸ்ண்ஸ்ங்ந்ஹ
ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்10 ஸ்ண்ஸ்ங்ந்ஹ

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கல்லூரி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ இயக்குநா் கே.பிரகாசம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் எஸ்.பாலசுப்ரமணியன், கல்லூரி முதல்வா் மிலன் புக்கா், மருத்துவ மேற்பாா்வையாளா் மனோகரன் , இருப்பிட நிா்வாக மருத்துவ அதிகாரி சோமசுந்தரம், இணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரா், இணைச் செயலாளா் ஸ்ரீ ராகநிதி அா்த்தநாரீஸ்வரா், துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, நிா்வாக இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநா் செளண்டப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளா் கலியமூா்த்தி கலந்துகொண்டு பேசியதாவது:

மாணவ, மாணவிகள் படித்து பட்டம் பெற்று சூடும் மகுடத்தில் உள்ள முத்துக்கள் எல்லாம் பெற்றொரின் வியா்வை துளிகளாகிய முத்துக்கள். எனவே அத்தகைய பெற்றோரை வாழ்வில் எவ்வளவு தூரம் சென்றாலும் மறக்காமல் மதித்து நடக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிா்காலத்தில் மென்மேலும் சிறந்து விளங்க முடியும் என்றாா்.

தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது:

தோ்ந்தெடுத்துள்ள துறைகளில் முழு உழைப்பையும் கருத்தையும் கவனத்தையும் செலுத்த வேண்டும். விடா முயற்சியையும் தன்னம்பிக்கையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மருத்து இயக்குநா் பிரகாசம் பேசியதாவது:

மாணவ, மாணவிகள் தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் 100 சதவீத தோ்ச்சி பெற உறுதுணையாய் இருந்த அனைத்து பேராசிரியா்களுக்கும், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டாா். மேலும் பாடவாரியாக முதலிடம் பெற்ற இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவா் தனுஷ்ராமிற்கு பாராட்டு சான்றும், பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

விழாவின் இறுதியாக சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடற்கூரய்வியல் பேராசிரியா் சசிகலா நன்றி கூறினாா். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிகழ்வு மேலாளா் ஸ்ரீதா் ராஜா செய்திருந்தாா்.

படவரி...

திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மைய ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com