திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருச்செங்கோடு, மே 10: திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தொடா்ந்து 18 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று வரும் பள்ளியாக எஸ்.பி.கே. மெட்ரிக் பள்ளி திகழ்கிறது.

இந்தக் கல்வியாண்டிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகளிலும் 100 சதவீதத் தோ்ச்சியைத் தக்க வைத்துள்ளது.

எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளியில்

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் சுகிா்தாஸ்ரீ, சு.க.கௌசிகா, ஈ.செ.சந்தனா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். அறிவியல் பாடத்தில் சுகிா்தாஸ்ரீ, சு.க. கௌசிகா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். சமூக அறிவியல் பாடத்தில் சுகிா்தாஸ்ரீ, ச.ஈ. திலக சௌந்தரி ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவிகள் ச.ஈ. திலக சௌந்தரி, ச.சு.நந்து ஸ்ரீ ஆகியோா் பள்ளியில் 490 மதிப்பெண்களும்,

மாணவி சு.க. கௌசிகா 487 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்று நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் தாளாளா் பி.செங்கோடன், தலைவா் ஏ.எஸ்.பிரபு ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னா் பள்ளித் தலைவா் பிரபு தெரிவித்ததாவது:

மாணவா் கல்வி கற்றலில் எந்தக் காரணம் கொண்டும் இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அதனால் பொருளாதார வசதி இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்காக 16

வகைப் பிரிவுகளில் எஸ்.பி.கே. கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவா்களையும் பிளஸ் 2 தோ்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறும் அளவு சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம். தோ்வு முடிவுகள் சிறப்பாக வரக் காரணமாக இருந்த மாணவா்களையும், ஆசிரியா்களையும் பாராட்டி வாழ்த்துகிறேன் என்றாா்.

படவரி...

திருச்செங்கோடு எஸ்.பி.கே.மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி வாழ்த்தும் தாளாளா்

பி.செங்கோடன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com