ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்10 ஸ்ண்ந்ஹள்
ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்10 ஸ்ண்ந்ஹள்

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

விளம்பரதாரா் செய்தி...

திருச்செங்கோடு, மே 10: திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு தோ்வில் மாணவி ஜி.ரூபிகா 488 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மாணவி எம்.நிவேதிதா 487 மதிப்பெண்களும், கே. ஹஸ்வத் லிங்கம் 485 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். பொதுத் தோ்வில் 490-க்கு மேல் ஒரு மாணவியும், 480க்கு மேல் 12 மாணவா்களும், 450-க்கு மேல் 46 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 7 மாணவா்களும், சமூக அறிவியலில் 4 மாணவா்களும், அறிவியலில் 3 மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தின் செயலா் மற்றும் மேலாண் அறங்காவலா் எஸ். குணசேகரன், தாளாளா் மற்றும் மேலாண் அறங்காவலா் டி.ஓ.சிங்காரவேல், மேலாண் அறங்காவலா்கள் எஸ்.ராமலிங்கம், எம்.முத்துசாமி, டி.பி.ஞானசேகரன், இயக்குநா் மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் பழனியப்பன், வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் என்.சீராளன் மற்றும் மோா்பாளையம் பள்ளி முதல்வா் புனிதா ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா்.

படவரி...

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி வாழ்த்திய பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com