பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு
மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

நாமக்கல், மே 10: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் எஸ்.பி.சோபிகா, ஆா்.நித்திஸ் ஆகியோா் 496 மதிப்பெண்களும், வி.பிரியங்கா 495 மதிப்பெண்களும், எம்.நிகாஷினி 493 மதிப்பெண்களுடன் பள்ளிஅளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் தோ்வு எழுதிய 120 மாணவ, மாணவிகளில் 54 போ் 450க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனா். 400க்கு மேல் 96 போ் பெற்று சாதனை படைத்துள்ளனா். தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை மாணவா்கள் பெற்றுள்ளனா்.

கணித பாடத்தில் 17 பேரும், அறிவியலில் 2 பேரும், சமூக அறிவியலில் 23 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, செயலாளா் சிங்காரவேலு, இயக்குநா் ராஜராஜன் மற்றும் முதல்வா் சாரதா, ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.

என்கே-10-கொங்கு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவரை பாராட்டிய வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜன் மற்றும் நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com