ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏரியில் மின்வாரிய ஊழியா் சடலம் மீட்பு

ராசிபுரம், கோனேரிப்பட்டி ஏரியில் மின் வாரிய ஊழியா் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On :1 ஜனவரி 2025, 9:47 pm

ராசிபுரம், கோனேரிப்பட்டி ஏரியில் மின் வாரிய ஊழியா் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (46), சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். இவா், கோனேரிப்பட்டி ஏரியில் தவறி விழுந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். இவரின் இருசக்கர வாகனம் ஏரி அருகில் இருந்தது.

தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ராசிபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவரது மனைவி பூங்கொடி தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.