முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

முதல்வரின் சிறப்பு மருத்துவத் திட்ட முகாம்

ஓமலூர் அருகேயுள்ள வே.கொங்காரப்பட்டியில் முதல்வரின் சிறப்பு மருத்துவத் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :

ஓமலூர் அருகேயுள்ள வே.கொங்காரப்பட்டியில் முதல்வரின் சிறப்பு மருத்துவத் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காடையாம்பட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட கே.என்.புதூர் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியான வே.கொங்காரப்பட்டி புனித ஏஞ்சலா மெட்ரிகுலேசன் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாதுபக்தசிங் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

இந்த முகாமில் கே.என்.புதூர், வேப்பிலை, கொங்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முழு உடல்பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில், தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கடிதம் அளிக்கப்பட்டது. முகாம் தொடக்க விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஈஸ்வரி பாண்டுரங்கன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாராஜன், சமுதாய சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, கே.என்.புதூர் மருத்துவ அலுவலர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.