சங்ககிரி வட்டம், தேவூர் அருகேயுள்ள சென்றாயனூர் சரபங்கா ஆற்றங்கரையோரம் அரசின் உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்துக் கொண்டிருந்த இரண்டு டிப்பர்களை வருவாய்த்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்து தேவூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்றாயனூர் சரபங்கா ஆற்றங்கரையோரம் அரசின் உரிய அனுமதியில்லாம் மணல் எடுபப்பதாக வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் வி.முத்துராஜா மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தணிக்கை செய்தனர். அப்போது, தேவூர் பச்சபாலியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்குச் சொந்தமான 2 டிப்பர்களில் மணல் எடுப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து தேவூர் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.