தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஓமலூரில் விமான நிலைய விரிவாக்கத்தை கைவிட கோரி தமாகா உண்ணாவிரதம்

சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஓமலூரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 9:10 pm

சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஓமலூரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் விமான நிலையம் 163 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. செயல்படாமல் இருந்த இந்த விமான நிலையம் தற்போது மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமான நிலையத்தை சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், விரிவாக்கத்துக்காக எடுக்கப்படும் நிலம் முழுமையும் நன்றாக விளைய கூடிய விவசாய நிலங்கள் என்பதால், இந்த நிலத்தை எடுக்கக் கூடாது என்றும், எடுக்க விடமாட்டோம் என்றும், விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ. சுசீந்திர குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா, காமலாபுரம், தும்பிபாடி, பொட்டியபுரம், சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியது: விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முற்பட்டால் விரைவில் சென்னையில் முதல்வரின் பணியைத் தடுக்கும் வகையில், மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் எம். எல். ஏ.க்கள், எம்.பிக்கள் என அனைவரும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்.
சென்னையிலிருந்து சேலத்துக்கு அமைக்கப்படுவதாக கூறும் எட்டு வழி சாலைக்கு இரண்டே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றார் அவர். போராட்டத்தில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ். ரகுநந்த குமார், ஓமலூர் வட்டாரத் தலைவர் ஓ.சி. ராஜேந்திரன், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.