ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6,158 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On :5 நவம்பர் 2018, 8:39 am IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6,158 கன அடியாக அதிகரித்துள்ளது. 
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4,130 கனஅடியாகவும், சனிக்கிழமை 5,548 கனஅடியாகவும்,  ஞாயிற்றுக்கிழமை காலை 6,158 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும்,  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட,  அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.42 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 62.81டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.