மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6,014 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 5,471 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 6,014 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 67.88 டி.எம்.சி.யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








